ஜோதிடம்

இன்றைய (19.11.2026) ராசிபலன்

மேஷம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்த்துவிடவும்.

ரிஷபம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வீடு தேடி வருவர். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

கடகம்: சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்பனையாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். குழப்பம் தீர்ந்து அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.

சிம்மம்: வாகனத்தில் கவனம் தேவை. சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிட்ட பணியை முடிக்க போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் வரும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். தெய்வீக ஈடுபாடு கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

துலாம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். ஷேர் மூலம் பணம் வரும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த குழப்பம் தீரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

தனுசு: கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். முன் கோபம் விலகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்த்துவிடவும்.

மகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். பங்குதாரரை அனுசரித்து நடக்கவும்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களுடன் விவாதங்கள் வரும். கவனமாகப் பேசுவது நல்லது. வெளியூர் பயணம் அலைச்சல் தரும். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

மீனம்: நம்பிக்கைக்கு உரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபாரத்தில் பழைய பணியாட்களை மாற்றுவீர்கள். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.

Source : Hindu Tamil

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button