சுவிஸ்

தனியாளாகப் போராடும் தாய்: சுவிஸில் ஆறு பேரில் ஒருவருக்கு ஏழ்மை அபாயம்

சுவிஸில் ஆறு பேரில் ஒருவர் ஏழ்மை அபாயத்தில் வாழ்கிறார். கிட்டத்தட்ட 14.5 இலட்சம் பேர். அவர்களில் ஒருவர் 26 வயது நாட்யா சாதி (Nadja Chahdi).

நாட்யா, தன் ஆறு வயது மகள் எலினாவை (Elina) தனியாக வளர்க்கிறார். அவர் வேலை செய்கிறார். மகளுக்கான பராமரிப்புப் பணமும் வருகிறது. ஆனாலும் இருவருக்கும் மாதம் சுமார் 3000 பிராங்க் மட்டுமே. பில் கட்டுவதா, நல்ல சாப்பாடு வாங்குவதா என்று ஒவ்வொரு மாதமும் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

நாட்யாவின் அம்மாவும் மூன்று பிள்ளைகளைத் தனியாக வளர்த்தவர். அந்தக் குடும்பம் அரசின் சமூக உதவித் தொகையில் வாழ்ந்தது. நாட்யாவும் பல ஆண்டுகள் அந்த உதவியை நம்பி இருந்தார். குழந்தைகள் காப்பகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். மகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியதால் அதிக நேரம் வேலை செய்ய முடியவில்லை.

23 வயதில் நாட்யா இன்ஸ்டாகிராம், டிக்டாக்கில் தன் வாழ்க்கையைப் பற்றி வீடியோ போட்டார். ஏழ்மையைப் பற்றியும், உதவி எங்கே கிடைக்கும் என்பதையும் சொன்னார். இன்று 50,000-க்கு மேற்பட்டோர் அவரைப் பின்தொடர்கிறார்கள். விளம்பரங்கள் மூலம் கொஞ்சம் வருமானமும் வருகிறது. அதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சமூக உதவியிலிருந்து விலகினார்.

ஆனால் பிரச்சினை முடியவில்லை. பெற்ற உதவித் தொகையில் பெரும்பகுதியை இன்னும் திருப்பிக் கட்ட வேண்டும். அது பல பத்தாயிரம் பிராங்க். இப்போது ஒரு நிறுவனத்தில் மணிநேரச் சம்பளத்தில் பகுதி நேர வேலை செய்கிறார். பராமரிப்புத் துறையில் நிரந்தர வேலை தேடுகிறார். ஏழ்மை என்பது தனிமனிதத் தோல்வி இல்லை, அமைப்பின் குறை என்கிறார். இதைப் பற்றி மக்கள் தயங்காமல் பேச வேண்டும் என்பது அவர் விருப்பம்.


மூலம்: SRF
புகைப்படம்: Zeyn Afuang / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button