சுவிஸ்

தெசின் அணைகளில் தண்ணீர் குறைவு: மின்சாரக் கட்டணம் உயருமா?

சுவிஸில் இத்தாலிய மொழி பேசும் தெசின் மாநிலத்தில் (Ticino) மின்சாரம் தயாரிக்கும் அணைகளில் தண்ணீர் மிகக் குறைவாக உள்ளது. இப்போது அணைகள் பாதி மட்டுமே நிறைந்திருக்கின்றன.

தெசின் மாநில மின்சார நிறுவனம் AET (Azienda elettrica ticinese) இதைத் தெரிவித்தது. இந்த நேரத்தில் அணைகள் வழக்கமாக நான்கில் மூன்று பங்கு நிறைந்திருக்கும். இந்த ஆண்டு அதைவிடக் கால்வாசி குறைவு. நிலைமை 2022 ஆண்டு போலவே இருக்கிறது. அந்த ஆண்டும் கடும் வறட்சி இருந்தது.

இந்த ஆண்டு மழை பெய்யவில்லை. பனியும் குறைவாகவே உருகியது. சமீபத்தில் பெய்த மழை அணைகளை நிரப்பப் போதவில்லை. அதனால் AET தயாரித்த மின்சாரம் வழக்கத்தை விடக் குறைவு.

ஆனாலும் கவலைப்பட வேண்டாம் என்கிறது AET. குறைந்த மின்சாரத்தை சந்தையில் வாங்கி, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டது.

2027 இல் மின்சாரக் கட்டணம் மாறாது. கட்டணத்தை ஆகஸ்ட் இறுதியிலேயே முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் சில ஆண்டுகள் கழித்து கட்டணம் உயரலாம். 2022 வறட்சிக்குப் பிறகு கட்டணம் உயர்ந்தது. உக்ரைன் போரும் ஒரு காரணம். இப்போது சந்தை விலை அன்றைவிடப் மிகக் குறைவு. உயர்வு வந்தாலும் சிறியதாகவே இருக்கும் என்று AET சொல்கிறது.

வசந்த காலத்தில் சோலார் மின்சாரம் ஓரளவு கை கொடுக்கும். ஆனால் எல்லோரும் எதிர்பார்ப்பது, மீண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதுதான்.


மூலம்: RSI
புகைப்படம்: Tejj / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button