சுவிஸ்

“நாங்கள் முக்கியமில்லையா?” – சுவிஸ் உட்பட ஐரோப்பாவில் இளையோர் போராட்டம்

சுவிஸ் உட்பட ஐரோப்பா முழுவதும் வெள்ளிக்கிழமை இளையோர் போராட்டம் நடக்கிறது. டெசின் மாநிலத் தலைநகர் பெலின்சோனாவிலும் (Bellinzona) இளையோர் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் நாடுகளில் இளையோர் சில வாரங்களாகவே வீதிகளில் இறங்கி வருகிறார்கள். தங்கள் குரலைக் கேட்க வேண்டும் என்கிறார்கள். தங்கள் தேவைகளுக்கு உண்மையான தீர்வு வேண்டும் என்கிறார்கள். ஆயுதங்களுக்கும் போர்களுக்கும் செலவு செய்யாமல், நல்ல எதிர்காலத்தைத் தர வேண்டும் என்பதும் அவர்கள் கோரிக்கை.

போராட்டத்தை ஏற்பாடு செய்யும் இளையோர் சொல்வது இது: அரசியல்வாதிகளுக்கும் தங்களுக்கும் இடையிலான இடைவெளி முன்பை விடப் பெரிதாகி விட்டது. அரசியல் தங்களைப் பற்றிப் பேசுவதில்லை, தங்களோடும் பேசுவதில்லை. இது வயதின் துடிப்பால் வரும் கலகம் என்று பல பெரியவர்கள் நினைத்து, பேசவே மறுக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆயுதத் தொழிலுக்குப் பணம் கிடைக்கிறது, ஆனால் கல்விக்குக் கிடைக்கவில்லை என்பது அவர்களுக்குக் கோபத்தைத் தருகிறது.

சுவிஸ் இளையோர் பற்றி Pro Juventute அமைப்பு (சிறுவர், இளையோர் நலனுக்காகச் செயல்படும் சுவிஸ் அமைப்பு) முதல் முறையாக ஆய்வு செய்தது. 15 முதல் 24 வயதினரில் 10 பேரில் 3 பேர் அடிக்கடி களைப்பாகவும் சோர்வாகவும் இருக்கிறார்கள். பள்ளி, பயிற்சி அழுத்தமும், வேலை எதிர்காலம் பற்றிய கவலையும் முக்கிய காரணங்கள். மூன்றில் ஒரு பெண்ணுக்கு மேலும், ஐந்தில் ஒரு ஆணுக்கு மேலும் மனநல சிகிச்சை எடுத்திருக்கிறார்கள், அல்லது எடுத்து வருகிறார்கள்.


மூலம்: RSI
புகைப்படம்: Nico Roicke / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button