பாசல்லாண்ட் மாநிலத்தில் (Baselland) உள்ள இரண்டு மருத்துவமனைகளையும் புதுப்பித்துத் தொடர மாநில நாடாளுமன்றம் (Landrat) முடிவு செய்துள்ளது. இதற்காக 750 மில்லியன் பிராங்க் உத்தரவாதத்துக்கும் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
பாசல்லாண்ட் மாநில மருத்துவமனைக்கு (KSBL) இப்போது லீஸ்டால் (Liestal), புரூடர்ஹோல்ஸ் (Bruderholz) என இரண்டு இடங்களில் மருத்துவமனைகள் உள்ளன. இரண்டு கட்டடங்களையும் பெரிய செலவில் புதுப்பிக்க வேண்டும். அதனால் பிராட்டல்னில் (Pratteln) ஒரே புதிய மருத்துவமனை கட்டலாம் என்று சிலர் கேட்டனர். ஆனால் மாநில அரசு மார்ச் மாத இறுதியில் பழைய இரண்டையும் வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தது.
நாடாளுமன்றத்தில் இதுபற்றி நீண்ட விவாதம் நடந்தது. சமூக ஜனநாயகக் கட்சி (SP), SVP, மிட்டே கட்சிகள் அரசின் திட்டத்தை ஆதரித்தன. FDP-யில் பெரும்பாலானோரும் GLP கட்சியும் எதிர்த்தனர். “மற்றவர்களுடன் பேசாமல் தனியாகப் போகிறோம்” என்பது அவர்கள் குற்றச்சாட்டு. தேவைக்கு அதிகமாக மருத்துவமனைப் படுக்கைகள் உருவாகும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
மாநிலச் சுகாதார அமைச்சர் தோமி யூர்டான் (Thomi Jourdan) இதற்குப் பதில் சொன்னார். மூன்று ஆண்டுகளுக்கு முன் பாசல் நகர மாநிலத்திடம் இணைந்து செயல்படக் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். சொலோதூர்ன், ஆர்காவ், யூரா மாநிலங்களும் மறுத்துவிட்டன. புதிய மருத்துவமனை கட்டினால் அது 2040-க்கு முன் தயாராகாது. செலவும் கூடலாம், தாமதமும் ஆகலாம் என்று அவர் சொன்னார்.
ஒரே புதிய மருத்துவமனைக்கு சுமார் 1.16 பில்லியன் பிராங்க் ஆகும் என மதிப்பீடு கூறுகிறது. இரண்டு பழைய மருத்துவமனைகளைப் புதுப்பிக்க 850 மில்லியன் பிராங்க் போதும்.
மூலம்: SRF
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash





