தெசின் மாநிலத்தில் (Ticino) தொழிற்பயிற்சி (Apprentissage) பெறும் இளைஞர்களுக்கு மாதம் 400 பிராங்க் கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என்று MPS என்ற இடதுசாரிக் கட்சி கோரியுள்ளது.
பயிற்சியின் முதல் ஆண்டில் கிடைக்கும் சம்பளம் மிகவும் குறைவு என்று இந்தக் கட்சி சொல்கிறது. தெசினில் 10 தொழில்களில் கிட்டத்தட்ட 7 தொழில்களில், முதல் ஆண்டுக் குறைந்தபட்சச் சம்பளம் மாதம் 800 பிராங்குக்கும் கீழ்தான். சம்பளம் போதாதபோது மீதிச் செலவை குடும்பங்களே பார்த்துக்கொள்கின்றன. அதனால் இளைஞர்களுக்கும் குடும்பங்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கொடுப்பதே நோக்கம் என்று கட்சியின் லூகானோ (Lugano) பகுதி ஒருங்கிணைப்பாளர் மாத்தேயோ போரெத்தி (Matteo Poretti) கூறினார்.
இந்தப் பணம் எங்கிருந்து வரும்? தொழிற்பயிற்சிக்கான மாநில நிதியத்துக்கு நிறுவனங்கள் ஏற்கனவே பணம் செலுத்துகின்றன. அந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்பது கட்சியின் யோசனை. சிறிய நிறுவனங்களும் இதைத் தாங்கிக்கொள்ள முடியும் என்று போரெத்தி நம்புகிறார். பயிற்சி மாணவர்களை உருவாக்குவது பெரும்பாலான நிறுவனங்களுக்கு லாபம்தான் என்று சுவிஸ் அரசு பயிற்சிக் கல்லூரியின் ஆய்வு ஒன்றையும் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
முதலில் தெருக்களில் கையெழுத்து வாங்கி, மனு ஒன்றைத் தயாரிக்கப் போகிறார்கள். அதன் பிறகு இந்தக் கோரிக்கையை மாநில நாடாளுமன்றத்தில் (Gran Consiglio) முன்வைப்பார்கள்.
மூலம்: RSI
புகைப்படம்: PTTI EDU / Unsplash





