சினிமா

பின்னணி குரல் பதிவு பணியில் பரபரப்பாக இயங்கி வரும் ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ படக் குழு

சொந்த வாழ்க்கையில் சர்ச்சைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வந்தாலும் கலை சேவையில் களைப்பு இல்லாமல் இயங்கும் ரவி மோகன் நடிப்பில் தயாராகி வரும் ‘கராத்தே பாபு ‘ எனும் திரைப்படத்திற்கு படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

‘டாடா’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கராத்தே பாபு’ எனும் திரைப்படத்தில் ரவி மோகன், தவ்தி எஸ். ஜிவால், சக்தி வாசுதேவன், கே. எஸ். ரவிக்குமார், நாசர், வி டி வி கணேஷ் , சுப்பிரமணியம் சிவா , கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் அண்டனி, சிந்து பிரியா, அஜித் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி‌ எஸ் இசையமைத்திருக்கிறார் . அரசியல்வாதியின் வாழ்வியலை மையப்படுத்தி கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் பின்னணி குரல் பதிவு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தையும், காணொளியையும் பகிர்ந்துள்ளனர். இதில் ரவி மோகன் அரசியல் தொடர்பான பஞ்ச் டொயலாக் பேசுவது இடம் பிடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button