
தமிழ் திரையுலகில் கட்டுமஸ்தான தோற்றத்திற்கு முன்னுதாரணமாக திகழும் நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஆர்யா 40’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை தி ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்யா தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் ஹலீதா ஷமீம் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடித்த திரைப்படங்கள் கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டிலும் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது





