இந்தியாஉலகம்சினிமாதமிழ்

தமிழக முதல்வர் நடித்த விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ ஜூலை 24 ஆம் திகதி ரிலீஸ்

தமிழக முதல்வர் விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுள்ளது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இந்தப் படத்திற்கு ‘A’ (18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) சான்றிதழ் வழங்கியுள்ளது.

முதலில் 2026 ஜனவரியில் வெளியாக இருந்த இப்படம், பல்வேறு காரணங்களால் பலமுறை தள்ளிப்போனது. தற்போது தணிக்கை அனுமதி கிடைத்திருந்தாலும், சான்றிதழ் பெறுவதற்கு முன் படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதில் முக்கியமானதாக, TVK தொடர்பான குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. படத்தில் விஜய் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்பதாகும். இதன் சுருக்கம் TVK ஆக இருப்பது, விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் சுருக்கப் பெயருடன் ஒத்துப்போகிறது.

தணிக்கை குறிப்பின்படி, 110:23-ஆவது நிமிடத்தில் இடம்பெற்ற “அம்பேத்கர் சட்டம்… TVK சட்டம்” என்ற வசனம் ஒலி மற்றும் காட்சி இரண்டிலும் மாற்றப்பட்டுள்ளது. அந்த வசனத்தில் இருந்த TVK குறிப்பு நீக்கப்பட்டு, வசனம் மியூட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

  • “பகவதம்”, “ரங்கநாதர்” ஆகிய சொற்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன.
  • “தேவிடியா பையா”, “ஒத்தா” போன்ற ஆபாச வார்த்தைகளும் மியூட் செய்யப்பட்டுள்ளன.
  • தரையில் விழும் இந்திய தேசியக் கொடி இடம்பெற்ற காட்சி அகற்றப்பட்டுள்ளது.
  • “OM” என்ற சொல் இடம்பெற்ற அனைத்து இடங்களும் நீக்கப்பட்டுள்ளன.
  • “New India” என்ற வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளது.
  • சதாம் தூக்குத் தண்டனை குறித்த வசனம் மியூட் செய்யப்பட்டோ அல்லது மாற்றப்பட்டோ உள்ளது.
  • துணை ஆணையர் (Deputy Commissioner) அலுவலக சின்னம் அவமரியாதையாக காட்டப்பட்ட காட்சி மாற்றப்பட்டுள்ளது.
  • “சிலுவையில்” என்ற சொல் மியூட் செய்யப்பட்டுள்ளது.
  • “ஷீலா ராணி” என்ற பெயர் இடம்பெற்ற இடங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன.
  • குழந்தை தீக்காயம் அடையும் காட்சி அகற்றப்பட்டு மாற்றுக் காட்சி இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு, படத்தின் இறுதி ஓட்ட நேரம் 3 மணி 3 நிமிடங்கள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் ஜூலை 24 அன்று வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்தப் படம், அரசியலில் முழுமையாக ஈடுபட்டுள்ள விஜயின் திரையுலகின் இறுதிப் படமாக கருதப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button