
யாழ்ப்பாணம் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 1661 ஏக்கர் காணிகளை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்திற்கு உரித்தாக்கி காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர பலாலி இராணுவ வைத்தியசாலை அகற்றப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், பலாலி விமான நிலையம் 774.98 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் விமான நிலைய அபிவிருத்தி பணிகளுக்காக மேலதிகமாக காணிகள் தேவைப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை விமானப் படை ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது. காணி அமைச்சு, நில அளவைத் திணைக்களம், முப்படை மற்றும் பிரதேச செயலக பிரிவுகளை ஒன்றிணைந்து பொது கொள்கை அடிப்படையில் முரண்பாடற்ற வகையில் இந்த கோரிக்கைக்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
இந்தப் பகுதியில் இராணுவத்தினர் வியாபார பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. தமது சுய தேவைக்காகவே பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பலாலி இராணுவ வைத்தியசாலை கட்டிடத்தை புனரமைக்க வேண்டிய தேவையுள்ளது இந்த வைத்தியசாலை 27.9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த வைத்தியசாலை புனரமைப்புக்கு 99.3 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டு 55 மில்லியன் ரூபா இதுவரையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 42.11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்தக் காணியை விடுவிக்க முடியாது.
பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தாலும், இந்த வலயத்துக்குள் உள்ள 1661 ஏக்கர் காணியை சட்டத்தின் பிரகாரம் இராணுவத்திற்கு உரித்தாக்கி, காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாலும் இந்த காணியை விடுவிக்க முடியாது.
பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியமற்ற காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன. 2009 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 692 ஏக்கர் காணிகளை விடுவித்தோம். எதிர்வரும் ஓரிரு மாத காலப்பகுதியில் 243 ஏக்கர் காணிக ளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு கா ணிகளை இயலுமான வகையில் விடுவிப்போம். காணிகளை விடுவிக்க முடியாத காணிக ளுக்காக மாற்றுக் காணிகளோ அல்லது இழப்பீடோ வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.





