சர்வதேசம்தமிழ்

செம்மணி புதைகுழி அவலத்தின் நீதிக்காக லண்டனில் அணிதிரண்ட புலம்பெயர் தமிழர்கள்

செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மனித எச்சங்களை நினைவுகூரவும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் லண்டன் Primrose Hill-ல் ஒன்றுகூடினர்.

வெள்ளைத் துணிகளால் தங்களை மூடி இறந்த உடல்களைப் போன்று படுத்து, செம்மணியில் புதைக்கப்பட்ட உயிர்களின் அவலத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

18 வயது தமிழ் மாணவி கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கோரும் குரலும் இதன் மூலம் மீண்டும் ஒலித்தது.
சுற்றுலாத் தீவு என்ற பிம்பத்திற்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ள இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களை உலகிற்கு நினைவூட்டும் வகையில் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு அஞ்சலட்டைகள் வழங்கப்பட்டன.
பல தசாப்தங்கள் கடந்தாலும் உண்மை புதைக்கப்படாது.
கொல்லப்பட்டவர்களை மறக்கமாட்டோம்.
நீதி கிடைக்கும் வரை எங்கள் குரல் ஓயாது என்ற வாசகத்துடன் இந்த விளிப்புணர்வும் கண்டன நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button