இலங்கைதமிழீழம்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரப்போகும் அதிசொகுசு பயணிகள் கப்பல்!

இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் எதிர்வரும் 14ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக துறைமுக அத்தியட்சகர் ரி. பகீரதன் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பலில் வருகை தரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, பயணிகள் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திரும்பி, அங்கிருந்து சென்னையை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக துறைமுக அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், வடக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் இவ்வாறான கப்பல் வருகைகள் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button