உலகம்

சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு – நேருக்கு நேர் மோதச் சென்ற பயணிகள் விமானங்கள்

சிட்னி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை Jetstar பயணிகள் விமானமும் Qatar Airways விமானமும் மோதுவதற்கு மிக அருகில் சென்ற சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

காலை சுமார் 7 மணியளவில், Gold Coast நகருக்குச் செல்ல தயாராக இருந்த Jetstar நிறுவனத்தின் Airbus A320விமானம் Taxiway-யில் சென்றுகொண்டிருந்தபோது, அதே பாதையை கடந்து இழுத்துச் செல்லப்பட்ட Qatar Airways நிறுவனத்தின் Boeing 777 விமானம் எதிரே வந்தது.

இதையடுத்து இரு விமானங்களும் அவசரமாக நிறுத்தப்பட்டன என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (ATSB) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் Jetstar விமானத்தின் கேபின் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். பயணிகள் எவரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. Qatar Airways விமானத்தின் முன்சக்கரத்தையும் (nose gear), அதை இழுத்துச் சென்ற towing வாகனத்தையும் இணைக்கும் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jetstar நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அதன் விமானம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படியே சென்றுகொண்டிருந்தது. அப்போது மற்றொரு விமானம் மிக அருகில் வந்ததால் விமானிகள் திடீரென பிரேக் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக Jetstar விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டது. பயணிகள் பின்னர் இயக்கப்பட்ட பிற விமானச் சேவைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ATSB விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானப் பணியாளர்கள், விமானத்தை இழுத்துச் சென்ற வாகனத்தின் (tug) பணியாளர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. மேலும், விமான நிலையத்தின் CCTV காட்சிகளும் ஆய்வு செய்யப்படவுள்ளன.

சிட்னி விமான நிலையத்தில் சமீப நாட்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், கடந்த ஜூலை 27ஆம் தேதியும் சிட்னி விமான நிலையத்தில் இரண்டு Qantas விமானங்கள் தொடர்பான மற்றொரு நெருங்கிய மோதல் சம்பவம் பதிவாகியிருந்தது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button