
மேஷம் : எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். பூர்வீக வீட்டை விற்க முயற்சிப்பீர். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். சகோதர வகையில் உதவியுண்டு. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும்.
ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.
மிதுனம் : நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.
கடகம் : குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபார போட்டிகளை சமாளிப்பீர். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.
சிம்மம் : நீண்ட நாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். வியாபாரத்தில் நிம்மதி உண்டு. பங்குதாரரின் ஆலோசனைப்படி கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.
கன்னி : குடும்பத்தினரின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். முன்கோபம் விலகும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
துலாம் : தடைகள் உடைபடும். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் நுணுக்கங்களைக் கற்று வெல்வீர்கள். பங்குதாரர் உதவிகரமாக இருப்பார்.
விருச்சிகம் : பழைய நண்பர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வாகனத்தை சீர் செய்வீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்.
தனுசு : குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். கையிருப்பு கரையக் கூடும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
மகரம் : புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம்.
கும்பம் : பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். தொழிலில் பாக்கிகள் வசூலாகும். வியாபார நெளிவு சுளிவுகளை கற்று வெல்வீர்.
மீனம் : நீண்டநாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.
Source : Hindu Tamil





