உலகம்

உலகளாவ ரீதியில் வீடின்றி வாழும் 340 கோடி மக்கள்

உலகளவில் சுமார் 340 கோடி மக்கள் பாதுகாப்பானதும், போதிய வசதிகளைக் கொண்டதுமான வீடுகள் இன்றி வாழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.

உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2026ஆம் ஆண்டுக்கான உலக நகரங்கள் அறிக்கையின்படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் முறைசாரா குடியிருப்புகள் மற்றும் சேரிப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

வீடுகளில் நிலவும் அதிக நெரிசல், வெப்பம், குளிர் மற்றும் பாதுகாப்பற்ற சூழல்கள் நோய்கள் மற்றும் காயங்களுக்கு வழிவகுப்பதாக WHO சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வீடுகளை உறுதிப்படுத்த வீடமைப்பு, நகர அபிவிருத்தி மற்றும் சுகாதாரத்துறைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button