உலகம்

வெளிநாட்டு மாணவர்களுக்கு, கனடா புலம்பெயர்தல் அமைப்பு எச்சரிக்கை

Canada’s immigration authority has issued a warning that they can work in the country only if their study permit allows it: வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்க வந்தால், அவர்களுடைய கல்வி அனுமதி அனுமதித்தாலன்றி பணி செய்ய முடியாது என கனடா எச்சரித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு, கனடா புலம்பெயர்தல் அமைப்பு, எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.

கனடாவுக்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி அனுமதியில், அவர்கள் பணி செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் கனடாவில் பணியாற்றலாம் என கனடா புலம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விதியை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ள கனடா புலம்பெயர்தல் அமைப்பு, அப்படிப்பட்டவர்கள் தங்கள் மாணவர் நிலையையே இழக்கக்கூடும் என்றும், கனடாவிலிருந்து வெளியேற்றப்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

அத்துடன், மாணவர்கள் வாரத்துக்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்யலாம் என்றும், அதைவிட கூடுதல் நேரம் பணி செய்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button