தமிழீழம்

தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது: உடனடியாக அகற்றக்கோரி மாநகர சபைக்கு பொலிஸார் கடிதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்

 

நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காணி நல்லூர் ஆலயத்திற்கு சொன்னதமானது. அதனை நீண்ட கால குத்தகை அடிப்படையில் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , குறித்த காணிக்குள் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலய கட்டுமானங்கள் மாநகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படாமல் , கட்டப்பட்டுள்ளதாக தாம் அறிவதாகவும் , குறித்த கட்டுமானத்தால் , மக்கள் மனதில் யுத்த எண்ணங்கள் தோன்றும் என்பதுடன் , அது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் பாதிக்கும் என்பதனால் , அதனை உடனடியாக இடித்து அகற்றுமாறு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மாநகர சபையினருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்

அதேவேளை , கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வில் , கண்ணாடி இழைகளால் தியாக தீபத்தின் சிலை உருவாக்கப்பட்டு , குறித்த நினைவாலயத்தில் அந்த சிலை வைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் , நினைவேந்தல் நிகழ்வுகள் முடிவுற்று மறுநாள் காலை ,  யாழ்ப்பாண பொலிஸார் அந்த சிலையை அங்கிருந்து அகற்றி எடுத்து சென்று நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button