தமிழீழம்பிரான்ஸ்

தந்தையின் சிலைக்கு அன்பு மகள் சுடரேற்றி, மாலை அணிவித்து நினைவு வணக்கம்.

தந்தையின் சிலைக்கு அன்பு மகள் சுடரேற்றி, மாலை அணிவித்து நினைவு வணக்கம்.

பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் மற்றும் மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – பிரான்சில் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களது மற்றும் அவரோடு சிங்கள அரசின் வான்வழித் தாக்குதலில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட மாவீரர்களின் 19ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு, பிரான்சின் 93ஆம் பிராந்தியமான லாக்கொர்நெவ் (La Courneuve) மாநகராட்சி மன்றத்திற்கு அருகிலுள்ள நினைவுச் சின்னத்தில் கடந்த 01.11.2026 அன்று மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு உழைத்தவர்களில் ஒருவரான தேசிய செயற்பாட்டாளர் திரு. தர்மதேவன் அவர்கள் தீபம் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் அன்பு மகள் தன் தந்தைக்குச் சுடரேற்றி, மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். மேலும், பாரீசில் படுகொலை செய்யப்பட்ட தேசிய செயற்பாட்டாளர் பருதி அவர்களின் தாயாரும் கலந்துகொண்டு, மாவீரர்களுக்குச் சுடரேற்றி மாலை அணிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் நினைவுச் சின்னத்தை நிறுவுவதற்கு முன்னின்று உழைத்த அமரர் தமிழீழத் தமிழர் கனசபை அரியரட்ணம் (அரியம் மாஸ்டர்) அவர்களின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது எனவும் அன்று அவர் சார்ந்த ‘எல்லைகள் அற்ற அமைப்பு’ மற்றும் ‘தமிழ் சங்கம்’ இணைந்து இதற்காக உழைத்தமையும், காலப்போக்கில் எல்லைகள் அற்ற அமைப்பு செயலற்றுப் போனமையும் கவலைக்குரியது எனவும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கி உதவிய லாக்கொர்நெவ் மாநகராட்சி மன்றத்திற்கு எமது நன்றிகளை தெரிவிப்பதுடன்,
வீரப்பிறவிகளின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தித் தொடர்ந்து பயணிப்போம் என அங்கு கூடிய மக்கள் கருத்து உறுதியெடுத்துக்கொண்டனர்.

#Tamilshelvan #MaaveerarNaal #FranceTamils #LaCourneuve #TamilEelam #PariTamils #TamilNews #MemorialDay #NeverForget

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button