
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை இராஜிநாமா செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இராஜிநாமா செய்த 5 தொகுதிகளுடன் சேர்த்து இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து இன்று திருச்சி கிழக்கில் போட்டியா? என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘திருச்சி தொகுதியில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்று கூறினார்.
மு.க. ஸ்டாலின் விரைவில் சட்டப்பேரவை செல்வார் என தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





