இந்தியா

இந்திய கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்கள் – பிரதமர் மோடி ஒப்படைப்பு

இந்திய கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்களை இணைத்த பிரதமர் நரேந்திர மோடி, கடல்சார் வலிமை இல்லாமல் எந்தவொரு நாடும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாது என பேசினார்.

 

 

 

மத்திய அரசின், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் என்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய 3 அதிநவீன கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் இந்த 3 கப்பல்களையும் மிக நேர்த்தியாகக் கட்டி முடித்துள்ளது.

 

 

 

”உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த 3 அதிநவீன போர்க் கப்பல்களையும் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணித்தார். ஒரே நேரத்தில் வெவ்வேறு திறன்களைக் கொண்ட 3 முன்னணிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது; நாட்டின் அதிநவீன நீரியல் வரைபடவியல் கப்பலான ஐ.என்.எஸ் சன்ஷோதக் கப்பலை இணைப்பது மகிழ்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில் கடற்படைக்கும், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடற்படையில் புதிய கப்பல்களை சேர்ப்பது இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னிறைவுக்கான சான்றாகும்.

 

 

 

கடல்சார் வலிமை இல்லாமல் எந்தவொரு நாடும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாது.

 

கப்பல் கட்டும் துறையில் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னேறி வருகிறது.

 

கடல்சார் பொருளாதாரத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் திறன் இந்தியாவிடம் உள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

ஐஎன்எஸ் துனகிரி போர்க் கப்பலானது, எதிரி நாடுகளின் ரேடார்களின் கண்களில் படாமல் கடலில் மறைந்து பயணிக்கும்.

 

 

 

இதில் எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. ஐஎன்எஸ் அக்ராய் கப்பலானது நீர்மூழ்கி வேட்டையாடி வகையைச் சேர்ந்ததாகும். இது அர்னாலா கிளாஸ் எனப்படும் ஆழமற்ற கடற்பகுதியில் பயணிக்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகும்.

 

 

 

ஐஎன்எஸ் சன்ஷோதக் கப்பலானது, பெரிய ஆய்வுக் கப்பலாகும். இது கடலாய்வுப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 4-வது பெரிய சர்வே கப்பல் என்று அழைக்கப்படுகிறது. ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளைத் துல்லியமாக வரைபடம் தயாரிக்க இந்தக் கப்பல் உதவும்.

 

 

 

ஒரே நேரத்தில் வெவ்வேறு திறன்களைக் கொண்ட 3 முன்னணிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button