இந்தியா

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணித்த தமிழக முதல்வர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் டிக்கெட் எடுத்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பயணம் மேற்கொண்டார்.

 

 

 

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உட்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் ஜோசப் விஜய் இன்று(25)தொடங்கிவைத்தார்.

 

 

 

 

 

இதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

 

 

 

ஓட்டுநர் அருகே முன்புற இருக்கைக்குச் சென்ற முதல்வர் விஜய், தனது தொலைபேசியில் சாலையில் நிற்கும் மக்களையும் பேருந்து பயணத்தை அவரே வீடியோவாக பதிவிட்டு பயணம் மேற்கொண்டார்.

 

 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 29ஏ பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய், பின்னர்,அதே பேருந்தில் தலைமைச் செயலகம் திரும்பினார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button