உலகம்

ரஷ்யா மீது உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

 

 

 

உக்ரைன், ரஷ்யா போர் இன்று 1,583ஆவது நாளாக நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

 

 

 

இந்நிலையில், ரஷ்யா மீது உக்ரைன் இன்று மிகப்பெரிய அளவில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் 12 மாகாணங்கள் மீது 660 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

 

 

 

இந்த்டிரோன்கள் ரஷ்ய வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் உயிரிழப்பு போன்ற பாதிப்பு ஏற்படவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button