
கடற்படையின் திறன்கள் இனி கற்பனைக்கு அப்பாற்பட்ட நம்பமுடியாத ஒன்றாக இருக்கும் என வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அமெரிக்காவும் தென்கொரியாவும் மேற்கொண்டு வரும் கூட்டு இராணுவ நடவடிக்கைகள் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு தள்ளுவதாகக் கூறி, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதையொட்டி, வடகொரியாவின் இராணுவ பலத்தை மேலும் தீவிரமாக அதிகரிக்கவும், அணுசக்தி படைகளை விரிவுபடுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு துறைமுகமான நம்போவில், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலான சோ ஹியோனை இயக்கி உள்ளது. இந்த அழிப்புக் கப்பல் முறையாக சேவையில் இணைவதற்கு முன்பு, கடந்த 14 மாதங்களாக இராணுவ செயல்பாட்டு சோதனைகளை நிறைவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு 5,000 தொன் வகை போர்க்கப்பல்களில் இந்த அழிப்புக் கப்பலும் ஒன்றாகும்.
இது குறித்து வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியதாவது: 5,000 தொன் எடை கொண்ட சோய் ஹியோன் என்ற போர்க்கப்பலைப் போன்ற இரண்டு போர்க்கப்பல்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்ட வேண்டும். நாட்டின் கடற்படை அணு ஆயுதமயமாக்கல் திட்டம் திட்டமிட்டபடி முன்னேறி வருகின்றது. கடற்படையின் திறன்கள் இனி கற்பனைக்கு அப்பாற்பட்ட நம்பமுடியாத ஒன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





