உலகம்

வெனிசியுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்.. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

தென் அமெரிக்க நாடான வெனிசியுலாவில் அடுத்தடுத்த சில நிமிட இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன.

 

 

 

ரிச்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த அசுர நிலநடுக்கங்களால் தலைநகர் கரகஸ் உட்பட பல பகுதிகளில் பிரம்மாண்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.இதனைத் தொடர்ந்து, கரீபியன் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

 

அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதற்கட்டமாக கரீபியன் கடற்கரைக்கு அப்பால், மோரோன் நகருக்கு மேற்கே, தலைநகர் கரகஸிலிருந்து 168 கிமீ தொலைவில் 7.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

 

 

இது பூமிக்கு அடியில் 13 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், அதே பகுதியில் அதைவிடக் கடுமையான 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இது பூமிக்கு அடியில் வெறும் 10 கிமீ ஆழத்திலேயே ஏற்பட்டதால் சேதத்தின் வீரியம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

 

 

 

இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், பியூர்ட்டோ ரிகோ மற்றும் வெர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

 

 

நிலநடுக்கத்தின் போது தலைநகர் கரகஸில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பயங்கரமாக ஆடியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.கரகஸின் முக்கியப் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் இடிந்து விழுந்ததில் அந்தப் பகுதியே பிரம்மாண்ட தூசிக் மேகங்களால் சூழப்பட்டுப் போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது.

 

 

 

மீட்புப் பணியில் ராணுவம்

 

100 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் பேரிடர்

 

 

 

வெனிசியுலா நாடு கடந்த ஒரு நூற்றாண்டில் கண்டிராத மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

 

 

 

துரதிர்ஷ்டவசமாக, 1821 ஆம் ஆண்டு ஸ்பெயினிடமிருந்து வெனிசியுலா சுதந்திரம் பெறுவதற்குக் காரணமான முக்கிய இராணுவ வெற்றியைக் கொண்டாடும் தேசிய விடுமுறை தினத்தில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளதால், மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்த சமயத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button