இலங்கை

இயன் மருத்துவர் கொலை – கைதானவர்களிடம் தொடர் விசாரணை

கண்டி தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும் பலத்த பாதுகாப்புடன் மேலதிக விசாரணைகளுக்கான (24) நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு தொடர்ந்து ஒவ்வொருவராக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் (25) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது கைதான மூவரையும் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நுவரெலியா தலைமை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சந்தேக நபர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்

கண்டி தெல்தெனிய ஆதார மருத்துவமனைக்கு அருகில் கடந்த 17ஆம் திகதி கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது குறித்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

 

 

 

அந்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது மேலும் முகத்தில் நகத்தால் ஏற்பட்ட சில காயங்கள் இருந்தமையும் அவை சுய நினைவில் இருக்கும் போது கழுத்து நெறித்து கொலை செய்ய முயற்சி செய்யும்போது பெண்ணால் தப்பித்துக் கொள்ளுவதற்கு சந்தேக நபரின் கைகளை பிடிக்கும்போது ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், பொலிஸாரின் நீண்ட தேடுதல் வேட்டையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவரது மனைவியையும் பொலிஸார் கடந்த (24) புதன் கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்தனர்.

 

 

 

இந்தக் கைதின் பின்னர் இவ்வாறு மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

உயிரிழந்தவர் அம்பாறை மருத்துவமனையில் இயன்முறை சிகிச்சையாளராக கடமையாற்றிய ஷம்யா தர்ஷனி (34 வயது) என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது அவரது காதலன் சடலத்தை காருக்குள் வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்ததுடன், இதற்கு முன்பு நுவரெலியாவில் தங்கியிருந்த விடுதியில் இரவு குறித்த பெண்ணை இலகுவாக தூக்கி செல்லும் காட்சி சிசிரிவி காணொளிகளிலும் பதிவாகியிருந்தது.

இந்தநிலையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையணியின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் வழிகாட்டலில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

 

 

 

👉 பொலிஸ் விசாரணைகள் மற்றும் சந்தேகநபர்கள் கைது

 

 

 

7 நாட்களாக சந்தேகநபரைத் தேடுவதற்காக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

 

 

 

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், சந்தேகநபர் வெள்ளவத்தை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

 

 

 

இந்த தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட யாழ்ப்பாண பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபர் பயணித்த பேருந்தை சாவகச்சேரி, கைதடி பகுதியில் மறித்து, சந்தேகநபரையும் அவரது மனைவியையும் ஒரு குழந்தையுடன் கைது செய்தனர்.

 

 

 

🔴 போலி வேடமிட்டு தப்பிச் செல்ல முயற்சி

 

 

 

கைதுசெய்யப்படும்போது சந்தேகநபர் தொப்பி மற்றும் முகக்கவசம் போலித் தலைமுடி (Wig) அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண்ணைப் போல் மாறுவேடம் அணிந்திருந்தனர்.

 

 

 

சந்தேகநபர் அடிக்கடி பயன்படுத்தும் சில போலி தலைமுடிகளையும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

 

 

 

🔴 இந்தியாவுக்கு தப்பியோடத் திட்டமா?

 

 

 

பிரதான சந்தேகநபர் தன்னை ஒரு தமிழர் என காட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது கைதான சந்தேகநபர், தான் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் அங்கிருந்து குருணாகல் சென்று, அங்குள்ள தமது ஏனைய இரு பிள்ளைகளையும் பார்த்த பின்னர் சரணடையவிருந்ததாகக் கூறினாலும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லவே திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்

 

 

 

தாம் உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்ததாகவும், இதனால் அச்சமடைந்து சடலத்தை காரில் ஏற்றி கண்டி தெல்தெனியவுக்குக் கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர் கூறுகிறார்.

 

 

 

எவ்வாறாயினும், பிரேத பரிசோதனை அறிக்கைகள் இது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

 

 

 

மேலும், அவரிடமிருந்து தாம் பணம் பெற்றிருந்தாலும், அது ஒன்றரை கோடி ரூபாய் அல்லவெனவும் அவர் கூறுகிறார்.

 

 

 

👉சந்தேகநபரின் மனைவியின் வாக்குமூலம்

 

 

 

தம்மால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு, தான் அந்த நபரின் “மூத்த சகோதரி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த மோசடிகளுக்கு உதவி செய்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.

 

 

 

தமக்குள்ள மூன்று பிள்ளைகளில் இருவரை கடந்த 21ஆம் திகதி நாரம்மலவில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.

 

 

 

👉 உடந்தையாக இருந்த பிரதேச சபை ஊழியர்.

 

 

 

நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபருக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கிய குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் (24) திகதி கைதுசெய்யப்பட்டார்.

 

 

 

அவரிடமிருந்து கிடைத்த தகவல்கள்

 

 

 

மரணத்தை ஏற்படுத்திய 16ஆம் திகதி மாலை, பிரதான சந்தேகநபர் சடலம் இருந்த அதே காரில் குண்டசாலையில் உள்ள இந்த ஊழியரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

 

 

 

பின்னர், சந்தேகநபரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் அதே காரில் அழைத்து வந்து, பிரதேச சபை ஊழியரின் வீட்டில் இரவு தங்கியிருந்துள்ளனர்,

 

 

 

மறுநாள் சடலத்தைத் தெல்தெனியவுக்குக் கொண்டு செல்லும்போது, பிரதேச சபை ஊழியர் மோட்டார் சைக்கிளில் காருக்குப் பின்னால் சென்றுள்ளார்.

 

 

 

சடலத்தை வீசிய பிறகு, சந்தேகநபரை மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

 

 

பின்னர் இந்த நபர்களை மாத்தளையில் உள்ள சந்தேகநபரின் தாயின் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் அவர் உதவியுள்ளார். சந்தேகநபர் இந்த ஊழியரின் மனைவியிடமும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக அவர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்,

 

 

 

👉 சந்தேகநபரின் பெண்கள் மோசடி வலை

 

 

 

பொலிஸ் விசாரணைகளின்படி, பிரதான சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட, திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றும் பெரும் மோசடிக்காரர் ஆவார்.

 

 

 

உயிரிழந்த பிசியோதெரபிஸ்டை அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றபோதுதான் அவர் சந்தித்துள்ளார், சந்தேகநபர் பெண்களை ஏமாற்றிப் பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார், அவர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பெண்களை ஏமாற்றிப் பெற்ற மொத்தப் பணம் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

 

 

 

அவர் கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளதுடன், அங்கு பணியாற்றிய இளம் பெண்ணிடமும் 10 இலட்சம் ரூபாவை அபகரிக்கத் திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

 

 

 

பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, (சிறு குழந்தையுடன்) உடந்தையாக இருந்த குண்டசாலை பிரதேச சபை ஊழியர், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைது தொடர்ச்சியாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button