
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் ஜனாதிபதி ட்ரம்ப் முறைப்படி விழாவை ஆரம்பித்து வைத்தார்.
இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகை முன்பாக உள்ள தேசியப் பூங்காவில் 16 நாட்கள் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், ஆரம்ப உரையாற்றிய ஜனாதிபதி “நாம் நமது 250 ஆவது சுதந்திர ஆண்டின் விளிம்பில் நிற்கிறோம் எனவும், அமெரிக்கா மீண்டும் கம்பீரமாக மீண்டெழுந்துள்ளது” எனவும், கூறினார்.
மேலும், இந்த ஆரம்ப விழாவில் அமெரிக்கப் போர் விமானங்களின் வான் சாகசங்கள், இராணுவ இசைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் மற்றும் பிரபல நாட்டுப்புறப் பாடகர் லீகிரீன்வுட்டின் இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.





