இலங்கை

விவசாயிகளுக்கு உடனடி தீர்வு தேவை – பாராளுமன்றத்தில் சாணக்கியன் வலியுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்று (24) நடைபெற்ற பாராளுமன்றத்தில் சாணக்கியனால் கேள்வி எழுப்பபட்டது.

 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மொத்த உரத் தேவை சுமார் 8,000 மெட்ரிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் இதுவரை 4,000 மெட்ரிக் தொன் உரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், CCS லங்கா நிறுவனத்தினால் 443 மெட்ரிக் தொன் உரம் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும், இதுவரை 300 மெட்ரிக் தொன் உரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

 

 

இதனால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் உரிய காலத்தில் போதுமான அளவு உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

 

 

தற்போது பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 135 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை செலவாகும் நிலையில், நெல்லுக்கான உத்தரவாத விலை 150 ரூபாவிற்கு மேல் நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,000 முதல் 3,500 மெட்ரிக் தொன் வரையிலான நெல்லைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் மட்டுமே காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button