
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பின் போர் நிறுத்தக் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து, தெற்கு லெபனானில் இருந்து தங்கள் நாட்டுப் படைகள் வெளியேறாது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மற்றும் இராணுவத் தலைவர் ஆகியோர் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், லெபனானில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தீர்க்கமாகச் செயல்படும் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில்,இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்த கருத்துக்கு முற்றிலும் மாறாக இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இருப்பினும்,தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதால் மேலும், தலைநகர் பெய்ரூத் வான்பரப்பில் இஸ்ரேலிய ட்ரோன்கள் பறப்பதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
அத்துடன்,ல்,இஸ்ரேலின் இந்த பிடிவாதப் போக்கால், அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான 60 நாள் கூட்டுக் கலந்துரையாடல் தடைபட வாய்ப்புள்ளது.
மேலும், அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்த முயற்சிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





