
குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தவிசாளரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் பகுதியளவான பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சாதாரண சிறுதிருத்த நிதியுதவியின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவின் அளவோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய கள நிலவரம், மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்ட சேத விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள், பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள், இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள், டிட்வா புயலின் பின்னரான பாடசாலைகளின்
மீள்கட்டுமானத்துக்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டுக்கான தேவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வதற்கும் உரிய தீர்வுகளை எட்டுவதற்கும் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக்குழுவின் அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயத்தை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அக்கடித்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







