
தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முற்பகல் 9:30க்கு ஆரம்பமானது.
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது.
இருப்பினும் ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்காததால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்து, விஜய் முதலமைச்சராகினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடந்த 11 ஆம் திகதி பதவி ஏற்றுக்கொண்டனர்.
சபாநாயகராக ஜே.டி.சி. பிரபாகர் நேற்ற பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டசபையில் இன்றுக்குள்(13) நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மற்றும் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.





