இந்தியா

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை – அதிரும் தமிழக அரசியல் களம்!

தமிழக முதலமைச்சராக நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

 

பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

 

அதில் ஒன்றான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஐ.ஜி தலைமையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணைக் காவல் கண்காணிப்பாளர், 4 ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள்.

 

குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து சிறப்பு அதிரடிப்படை கண்காணிக்கும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button