
இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் மேல், சப்ரகமுவா, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிக பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





