
தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று முற்பகல் 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக, தமிழக வெற்றிக்கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி உறுப்பினர் சீனிவாச சேதுபதி இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார்.





