
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் நாளை மறுதினம் ( 14) உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கான விசேட காட்சிகளைத் திரையிடுவதற்குத் தமிழக அரசு விசேட அனுமதி வழங்கியுள்ளது.
மே மாதம் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் விசேட காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நாளொன்றுக்கு 5 காட்சிகள் வீதம் திரையிடப்படவுள்ளன.
காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த 5 காட்சிகளையும் திரையிடத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா மற்றும் நட்டி சுப்ரமணியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர். பிரபு இப்படத்தைத் தயாரித்துள்ளதுடன், சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.
குறித்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் இப்படத்திற்குத் தமிழக அரசு விசேட காட்சிகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளமை சூர்யாவின் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





