இலங்கைதமிழீழம்தமிழ்

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு கோரிக்கை

செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் எலும்புக்கூடு எதிர்வரும்  ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை குறித்த எலும்புக்கூடு தொடர்பில் யாருக்காவது  தகவல்கள் தெரிந்திருந்தால், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட எலும்புக்கூடு இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்

குறித்த எலும்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் , குறிப்பாக எலும்புக்கூட்டை சுற்றி மரப்பெட்டி வடிவிலான பொருள் காணப்படுகிறது. அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் , நீதிமன்ற பதிவாளருக்கோ , சட்டத்தரணி ஊடாக நீதிமன்றுக்கோ , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள் சில வெளிப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button