சுவிஸ்

டிச்சினோவில் 77 வயது மூதாட்டியைக் காணவில்லை – போலீஸ் தேடுகிறது

சுவிஸின் தெற்கே உள்ள டிச்சினோ மாநிலத்தில் (Ticino) 77 வயது மூதாட்டி ஒருவரைக் காணவில்லை. அவரைத் தேடும் அறிவிப்பை போலீஸ் திங்கட்கிழமை காலை வெளியிட்டது.

காணாமல் போனவர் மரீனா ஜியாகோமினா புட்சினி (Marina Giacomina Buzzini). அவர் சுவிஸ் குடிமகள். ரியாட்சினோ (Riazzino) பகுதியில் உள்ள தன் வீட்டிலிருந்து, நவம்பர் 13 வெள்ளிக்கிழமைக்கும் 15 ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையே காணாமல் போனார். அவருக்கு ஆரம்ப நிலை மறதி நோய் (டிமென்ஷியா) இருப்பதாக போலீஸ் சொல்கிறது.

அவர் மிகவும் வெள்ளை நிறமானவர். மெலிந்த உடல். உயரம் சுமார் 160 சென்டிமீட்டர். குட்டையான நேரான நரைமுடி. பழுப்பு நிறக் கண்கள். முட்டை வடிவ முகம்.

கோடுகள் போட்ட கறுப்பு நிற குளிர்கால ஜாக்கெட்டும், கறுப்பு பேன்ட்டும் அணிந்திருக்கலாம். கையில் கறுப்பு தோல் பை இருக்கலாம். இத்தாலிய மொழியும், டிச்சினோ பகுதியின் பேச்சு வழக்கும் பேசுவார்.

இவரைப் பற்றி எந்தத் தகவலாவது தெரிந்தால், டிச்சினோ மாநிலப் போலீஸை 0848 25 55 55 என்ற எண்ணில் அழைக்க வேண்டும்.


மூலம்: RSI
புகைப்படம்: Age Cymru / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button