சுவிஸ்ஸில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 10 பேரில் 1க்கும் மேற்பட்டோர் வேலை இல்லாமல் இருந்தனர்.
எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 76,000 இளைஞர்கள். 25 முதல் 39 வயதுக்காரர்களின் நிலையும் மோசமாகி வருகிறது. பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களும் தப்பவில்லை. அவர்களிடையே வேலையில்லாதவர் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆனால் எல்லாப் படிப்புகளுக்கும் இதே நிலை இல்லை. சுவிஸ் முதலாளிகள் சங்கத்தின் இன்னும் வெளியிடப்படாத ஆய்வின்படி, தொழிற்பயிற்சி (அப்ரண்டிஸ்ஷிப்) முடித்து, அடுத்த கட்ட உயர் தொழிற்கல்வி படித்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்புகள் உள்ளன. நிறுவனங்களுக்குத் தேவையான இடங்களிலேயே பயிற்சி இடங்கள் உருவாக்கப்படுவதுதான் காரணம். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் வேலை கிடைப்பது ஒப்பீட்டளவில் எளிது.
மருந்துத் தொழிலும் வங்கித் துறையும் இப்போது கடினமான காலத்தில் உள்ளன. உலக அரசியல் பதற்றங்கள் அவற்றைப் பாதிக்கின்றன. கணினித் துறையிலும் சிரமம் உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) வந்த பிறகு, புதிதாக வருபவர்கள் செய்துவந்த சில புரோகிராமிங் வேலைகளை இப்போது கணினியே செய்துவிடுகிறது. AI நிபுணர்களுக்குத் தேவை கூடி வருகிறது. ஆனால் அது மட்டும் இளம் பட்டதாரிகளின் சிரமத்தைத் தீர்க்கப் போதாது.
மூலம்: Le Matin
புகைப்படம்: Hitesh Choudhary / Unsplash





