சுவிஸ்

சூரிச் விமான நிலையத்தில் தானாக ஓடும் சக்கர நாற்காலிகள் சோதனை

சூரிச் விமான நிலையத்தில் (Zürich) தானாகவே ஓடும் 4 சக்கர நாற்காலிகளை சோதனை முறையில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நடக்கக் கஷ்டப்படும் பயணிகள் விமான வாசல் (Gate) வரை எளிதாகப் போவதற்காக இது.

இந்த நாற்காலிகளுக்கு ஓட்டுநர் தேவையில்லை. பயணிகள் தாங்களாகவே போகலாம். இதனால் அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று விமான நிலையம் சொல்கிறது. அதேநேரம் ஊழியர்களுக்கு நேரம் மிஞ்சும். அந்த நேரத்தை அதிக உதவி தேவைப்படும் பயணிகளுக்குக் கொடுக்கலாம்.

சோதனைக் காலத்தில் நாற்காலிகள் குறிப்பிட்ட பாதைகளில் மட்டுமே ஓடும். காத்திருப்பு பகுதியிலிருந்து டாக் A (Dock A) வாசல்கள் வரை போகும். போர்டிங் பாஸ், பாதுகாப்புச் சோதனை, பாஸ்போர்ட் சோதனை உள்ள இடங்களுக்கு அவை போகாது.

நாற்காலியில் 30-க்கும் மேற்பட்ட சென்சார்கள் உள்ளன. தடைகளைக் கண்டுபிடித்து தானாகவே பிரேக் போடும். உதவி வேண்டுமென்றால் SOS பொத்தானை அழுத்தலாம்.

ஊழியர்களின் உதவிக்குப் பதிலாக இது வராது என்று விமான நிலையம் சொல்கிறது. அது கூடுதல் வசதி மட்டுமே. இதே மாதிரி நாற்காலிகள் முனிக், ஆம்ஸ்டர்டாம், ரோம் விமான நிலையங்களில் ஏற்கனவே உள்ளன.


மூலம்: SRF
புகைப்படம்: Roberto Quezada-Dardon / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button