பேர்ன் மாநிலத்தில் (Bern) உள்ள லாட்டர்புருன்னன் (Lauterbrunnen) பகுதியில் ஒரு பேஸ் ஜம்ப் வீரர் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு காணாமல் போன அவரது உடல், ஞாயிறு காலை ஸ்டால்டன்ஃப்ளூ (Staldenfluh) பாறையின் அடிவாரத்தில் கிடைத்தது.
பேஸ் ஜம்ப் என்பது உயரமான பாறையிலிருந்து பாராசூட்டுடன் குதிக்கும் விளையாட்டு.
சனிக்கிழமை இரவு 8.25 மணிக்குப் பிறகு பொலிஸுக்குத் தகவல் வந்தது. உடனே சுவிஸ் மீட்பு ஹெலிகாப்டர் சேவையான ரேகா (Rega) ஹெலிகாப்டரை அனுப்பியது. தேட வேண்டிய பகுதியை அது வரையறுத்தது. சில மணி நேரம் கழித்து, தரையில் தேடிய குழுவினர் அவரது உடலைக் கண்டுபிடித்தனர்.
அவசர சிகிச்சை மருத்துவர் வந்து பார்த்தார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை மட்டுமே உறுதிப்படுத்த முடிந்தது. இறந்தவர் யார் என்பது பற்றி பொலிஸிடம் தெளிவான தடயங்கள் உள்ளன. ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
தேடுதலில் ரேகா, ஏர்-கிளேசியர்ஸ் (Air-Glaciers), சுவிஸ் மலை மீட்புச் சேவை ஆகியவை பங்கேற்றன. விபத்து எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளது. பேர்ன் மாநில பொலிஸ் திங்கட்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது.
மூலம்: Le Matin
புகைப்படம்: Kevin Schmid / Unsplash





