சுவிஸ்

இணைய ஹேக்கிங் தாக்குதல்கள் மேலும் மோசமாகின்றன – சுவிஸ் அதிகாரி எச்சரிக்கை

சுவிஸில் இணைய ஹேக்கிங் தாக்குதல்கள் கூடிக்கொண்டே போகின்றன, அவை முன்பை விட ஆக்ரோஷமாகவும் மாறிவிட்டன என்று சுவிஸ் அரசின் இணையப் பாதுகாப்பு அலுவலகத்தின் (Bundesamt für Cybersicherheit) இயக்குநர் ஃப்ளோரியன் ஷ்யூட்ஸ் (Florian Schütz) எச்சரித்துள்ளார்.

சுவிஸில் இது பற்றிய புகார்கள் அதிகரித்துள்ளன. முன்பு ஹேக்கர்கள் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைப் பூட்டி வைத்து, பணம் கேட்பார்கள். இப்போது நேரடியாகச் சேதமும் உண்டாக்குகிறார்கள். பிரான்சில் குளிர்பதன இயந்திரங்களைத் தாக்கி, உணவுப் பொருட்களையும் இரத்தப் பைகளையும் அழிக்க முயன்றார்கள். அதாவது இணையத் தாக்குதல் நிஜ வாழ்க்கையையும் பாதிக்கிறது.

சில ஹேக்கர் குழுக்களை, அவர்களின் சொந்த நாடே பிடிப்பதில்லை என்று ஷ்யூட்ஸ் நினைக்கிறார். உதாரணமாக ரஷ்யாவில் உள்ள சில குழுக்கள். அதனால்தான் தாக்குதல்கள் கூடுகின்றன என்கிறார். செயற்கை நுண்ணறிவு (AI) இதற்குக் காரணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் AI மூலம் தாக்குதல்கள் நடக்கலாம் என்கிறார்.

இன்னொரு பிரச்சனை, பல போன், கம்ப்யூட்டர் பொருட்கள் பாதுகாப்பாகத் தயாரிக்கப்படுவதில்லை. விலை குறைவாகச் செய்யவே பார்க்கிறார்கள். அதனால் பாதுகாப்பு மிகக் குறைவான பொருட்களை விற்கவிடாமல் தடுக்கும் புதிய சட்டத்தை சுவிஸ் மத்திய அரசு (Bundesrat) தயாரித்து வருகிறது.

ஷ்யூட்ஸ் சொல்லும் ஆலோசனைகள் இவை: போன், கம்ப்யூட்டர் அப்டேட்களை உடனே போடுங்கள். முடிந்த இடங்களில் இரண்டு படி பாதுகாப்பை (பாஸ்வேர்டுடன் ஆப் மூலம் இரண்டாவது உறுதிப்படுத்தல்) இயக்குங்கள். இணையத்தில் நம்ப முடியாத அளவுக்கு நல்ல சலுகை வந்தால், அதைத் தொடாதீர்கள்.


மூலம்: SRF
புகைப்படம்: FlyD / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button