
2026 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, ஆடவர் FIFA உலகக் கோப்பையை 64 அணிகள் கொண்ட போட்டியாக விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று FIFA தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோதெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இணைந்து நடத்தும் 2026 உலகக் கோப்பை, 32 அணிகளில் இருந்து 48 அணிகளாக விரிவுபடுத்தப்பட்ட முதல் தொடர் ஆகும். இதைத் தொடர்ந்து, மேலும் 64 அணிகளாக அதிகரிக்கும் வாய்ப்பும் பரிசீலனையில் உள்ளது.
இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் Blue Sport தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இன்ஃபான்டினோ கூறுகையில்,
“2026 உலகக் கோப்பை முடிந்த பிறகு, இதுகுறித்து FIFA-வின் சம்பந்தப்பட்ட குழுக்களில் நிச்சயமாக விவாதிக்கப்படும். உலகக் கோப்பை என்பது ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவுக்காக மட்டும் அல்ல; உலகின் அனைத்து நாடுகளுக்குமான போட்டி. ஒவ்வொரு நாடும் உலகக் கோப்பையில் விளையாடும் கனவை காண வேண்டும்.”
மேலும், “உலகம் முழுவதும் அணிகளின் தரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சிறிய நாடுகளுக்கு உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், அவர்கள் மேலும் முன்னேற வேண்டிய ஊக்கத்தையும் இழக்க நேரிடும்” என்றும் அவர் கூறினார்.
64 அணிகள் கொண்ட உலகக் கோப்பை என்ற யோசனை முதன்முதலாக 2025 மார்ச் மாதத்தில், போட்டியின் 100ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள 2030 உலகக் கோப்பையை விரிவுபடுத்தும் வகையில் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பான CONMEBOL முன்வைத்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் இன்ஃபான்டினோ, CONMEBOL தலைவர் அலெஹான்ட்ரோ டொமிங்கஸ், அர்ஜென்டினா மற்றும் உருகுவே கால்பந்து சங்கத் தலைவர்கள், பராகுவே மற்றும் உருகுவே அரசுத் தலைவர்களுடன் நியூயார்க்கில் சந்தித்து இந்த முன்மொழிவு குறித்து கலந்துரையாடினார்.
அப்போது டொமிங்கஸ் தெரிவிக்கையில்,
“2030 உலகக் கோப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒற்றுமை, படைப்பாற்றல் மற்றும் பெரிய கனவுகளை நம்ப வேண்டும். கால்பந்து அனைவருடனும் பகிரப்படும் போதுதான் அதன் கொண்டாட்டம் உண்மையில் உலகளாவியதாக மாறும்.” என்றார்.
ஆனால் இந்த யோசனைக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
Concacaf தலைவர் விக்டர் மொண்டாக்லியானி, 2025 ஏப்ரலில் ESPN-க்கு அளித்த பேட்டியில்,அதேபோல், UEFA தலைவர் அலெக்சாண்டர் செஃபெரின் இந்த யோசனையை “மோசமான யோசனை” என்று விமர்சித்துள்ளார்.
“ஆடவர் உலகக் கோப்பையை 64 அணிகளாக விரிவுபடுத்துவது, போட்டிக்கும், தேசிய அணிகள், கழகப் போட்டிகள், லீக் தொடர்கள் மற்றும் வீரர்கள் உள்ளிட்ட கால்பந்து சூழலுக்கும் சரியான முடிவு அல்ல”என்று தெரிவித்தார்
அதேபோல், UEFA தலைவர் அலெக்சாண்டர் செஃபெரின் இந்த யோசனையை “மோசமான யோசனை” என்று விமர்சித்துள்ளார்.
இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், 64 அணிகள் கொண்ட உலகக் கோப்பையில் மொத்தம் 128 போட்டிகள்நடைபெறும். இது 1998 முதல் 2022 வரை பயன்படுத்தப்பட்ட 32 அணிகள் கொண்ட வடிவத்தில் இடம்பெற்ற 64 போட்டிகளின் இரு மடங்கு ஆகும். அதேவேளை, 2026 உலகக் கோப்பையில் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன.





