உலகம்

ஐரோப்பியாவில் தீவிரமடையும் போராட்டங்கள் ; பல இடங்களில் மோதல்

பிரான்ஸில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக்கும் பரவியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இதன்படி, பிரான்ஸுக்கு அப்பால் பெல்ஜியம், அல்பேனியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக ஐரோப்பிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில், கல்வி முறையில் சிறந்த நிலைமைகளை ஏற்படுத்தக் கோரி முன்னெடுக்கப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் பாரிய மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் மிலான் நகரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினரும் இராணுவத்தினரும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள், கல்வி தொடர்பான கோரிக்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற விவகாரங்கள் தொடர்பாகப் போராட்டங்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்நாடுகளின் நிலைமைகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button