இலங்கைதமிழீழம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் – சந்திப்புக்கு நேரம் கோரி ஜனாதிபதிக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ள மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்புக்கு நேரம் வழங்குமாறு கோரி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தொடர்ச்சியாக இடம்பெறும் ஆக்கிரமிப்புகளாலும், அவற்றை அணுகுவதில் உள்ள சிரமங்களாலும் பால் பண்ணையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று மாவட்ட மட்டத்திலும், பாராளுமன்றத்தின் ஊடாகவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், திருப்திகரமான எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதால், இவ்விவகாரத்தில் ஜனாதிபதியின் நேரடித் தலையீடு உடனடியாகத் தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மற்றும் நிலையான தீர்வு குறித்துக் கலந்துரையாடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கு சந்திப்பொன்றுக்கான நேரத்தை விரைவாக வழங்குமாறும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button