இலங்கை

24 மணிநேரத்தில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

நடப்பாண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037 ஆக உயர்ந்துள்ளதாகவும் இதுவரை 28 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சாதாரணமாக நாளொன்றுக்கு 150 முதல் 200 வரையான டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகும் நிலையில், அண்மைய நாட்களில் அந்த எண்ணிக்கை 600 முதல் 650 வரை அதிகரித்துள்ளது.

 

 

 

இந்நிலையிலேயே தற்போது நாளாந்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்துள்ளதாகவும், இது கவலைக்கிடமான நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

டெங்கு நோயாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையை உடனடியாக கட்டுப்படுத்த சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென வைத்தியர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button