சினிமா

கருப்பு’ படத்தின் கதை முதலமைச்சர் விஜய்க்காக எழுதப்பட்டது: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட ரகசியம்!

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யாவின் கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கருப்பு திரைப்படம், உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

 

இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஊராகச் சென்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், ஈரோட்டில் உள்ள திரையரங்கு ஒன்றிற்குச் சென்ற அவர், ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்வையிட்டதுடன், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளார்.

 

 

 

இதன்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு திரைப்படத்தின் பின்னணி குறித்த சுவாரசியமான ரகசியம் ஒன்றை உடைத்துள்ளார்.

 

அவர் குறிப்பிடுகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் தான் ‘கருப்பு’ படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். இந்தத் திரைப்படத்தின் கதையை முதலில் முதலமைச்சர் விஜயிடமே கூறினேன். கதையைக் கேட்ட அவர் மிகவும் பாராட்டியதுடன், இதனை உடனே செய்ய முடியுமா? என்றும் கேட்டார். ஆனால், எனக்கு திரைக்கதையை முழுமையாக்க இன்னும் கூடுதல் காலம் தேவைப்படும் என்று கூறினேன். அதற்குள் அவர் அரசியலில் முழுமையாகக் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

 

விஜய்க்காக உருவாக்கப்பட்ட இக்கதை, பின்னர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி தற்போது 200 கோடியைக் கடந்து சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button