அரசியல்

டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து: சிறையில் பாதுகாப்பு கோரும் சுரேன் ராகவன்

  1. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு மாபெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார்.

 

ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர், டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தனது அரசியல் எதிரிகளால், குறிப்பாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 10க்கும் மேற்பட்ட முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என்றும் குறிப்பிட்டார்.

 

 

 

“ஆயிரம் பேர் மட்டுமே இருக்க வேண்டிய மஹர சிறைச்சாலையில் தற்போது 3,000க்கும் அதிகமான கைதிகள் இருக்கின்றனர்.

 

இத்தகைய நெருக்கடியான சூழலில் அவரை வைத்திருப்பது அவரது உயிருக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என அஞ்சப்படுகிறது.

 

அவர் தவறு செய்திருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள், ஆனால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய முழுமையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button