
General29 December 2025
இரண்டு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்து

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஹெமில்டன் நகருக்கு மேலே இரண்டு உலங்கு வானூர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (28) காலை சுமார் 11:25 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களிலும் விமானிகள் மட்டுமே இருந்ததாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது.
ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றொரு விமானி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






