விளையாட்டு

ரோகித், கோலியை பின் தள்ளிய கில் – தொடரும் சாதனைகள்

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பாக ஜெய்ஸ்வால் 173 ஓட்டங்களையும் , அணித்தலைவர் சுப்மன் கில் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலும் இருந்தனர்.

இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினர்.

குறித்த வீரர்கள் இருவரும் இரட்டை சதம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெய்ஸ்வால் 175 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10 சதம் ஆகும்.

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கில் (10 சதம்) படைத்துள்ளார்.

அந்த பட்டியலில் ரோகித் 9 சதங்களுடன் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

7 சதங்களுடன் ஜெய்ஸ்வால் 3ஆவது இடத்தில் உள்ளார்.

மேலும், ஆண்டில் 5 சதங்கள் விளாசிய இந்திய அணித் தலைவர் வரிசையில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

அந்த பட்டியலில் சுப்மன் கில் 5 சதங்களுடன் 3ஆவது இடத்திலும், விராட் கோலி 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 5 சதங்கள் விளாசி முதல் இரண்டு இடங்களில் உள்ளார்.

அத்தோடு, சச்சின் டெண்டுல்கர் 1997 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைவராக இருந்த போது 4 சதங்கள் விளாசியிருந்தார்.

அந்த சாதனையை சுப்மன் கில் தற்போது முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button