
இந்தியாவின் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான் எனவும் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் யாருடனும் கூட்டணி கிடையாது, எந்த காலத்திலும் தனித்தே போட்டியிடுவோம், இறைமகன் இயேசு கிறிஸ்து மீது ஆணையாக எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.





