விளையாட்டு

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், அடுத்ததாக இந்திய அணி விளையாடவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர்களில் புதிய வீரர்களை இணைத்துக்கொள்வது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலரும் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், புதிய வீரர்களை தெரிவு செய்வதில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இதனால் புதிய திட்டம் ஒன்றை இந்திய கிரிக்கெட் சபை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதன்படி, 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வீரர்களை இரண்டு அணிகளாக பிரித்து விளையாட வைப்பதே நோக்கமாகும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே நேரத்தில் பல போட்டிகள் வரவிருப்பதையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு ஏராளமாக டி20 கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறவுள்ள நிலையில், இந்த திட்டத்தின் மூலம் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

புதிய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சிறந்த 35 வீரர்களை இந்திய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button